பொம்மையை விழுங்கிய சிறுவன் உயிரிழப்பு

By என்.மகேஷ் குமார்

‘ஸ்நாக்ஸ்’ பாக்கெட்டில் இருந்த பிளாஸ்டிக் பொம்மையை தெரியாமல் விழுங்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு மேஸ்திரி காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராவ். இவரது மனைவி துர்கா. இவர்களது மூத்த மகன் நிரீக்ஷன் குமார் (4). நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பெட்டிக் கடையில் ரூ.5 கொடுத்து ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கினான். அந்த பாக்கெட்டில் பிளாஸ்டிக் பொம்மை வைத்திருப்பதால் அதனை ஆசையுடன் வாங்கி கொண்டான்.

பின்னர், வீட்டுக்குச் சென்று அந்த பாக்கெட்டை ஆவலுடன் பிரித்து சாப்பிட தொடங்கினான். ஆனால், அதில் இருந்த பிளாஸ்டிக் பொம்மையும் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் தவித்தான். இதனை கண்ட அவரது தாய் கதறி அழுது முதுகில் தட்டிப் பார்த்தார். பிறகு நிரீக்ஷன் குமாரை ஏலூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீஸில் புகார்

அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த அவனது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். குழந்தைகள் ஆசையுடன் உண்ணும் நொறுக்கு தின்பண்டங்களுக்குள் பொம்மையை வைத்து விற்றதால்தான் தன் மகன் அதனை தெரியாமல் விழுங்கி இறந்து விட்டான். ஆதலால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கூறினர். மேலும் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஏலூரு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்