கல் குவாரி நடத்துவதை தட்டி கேட்டவர்களை சேற்று நீரை குடிக்க வைத்து கொடுமை: பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு

By என்.மகேஷ் குமார்

சட்ட விரோதமாக கல் குவாரி நடத்துவதை தட்டி கேட்டதால், 2 தலித்துகளை சேற்றில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதுடன் சேற்று நீரை குடிக்க வைத்த பாஜக நிர்வாகி மீது தெலங்கானா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அபங்கபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பரத் ரெட்டி. இவர் பாஜக மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளராவார். அதே பகுதியைச் சேர்ந்த தலித் இனத்தைச் சேர்ந்த மணி கொல்லா கங்காதர் என்பவர் நேற்று முன்தினம் பரத் ரெட்டி மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் அவர் தெரிவித்திருப்பதாவது; பரத் ரெட்டி சட்டவிரோதமாக கல் குவாரி நடத்தி வருகிறார். எர்ர குண்டா குட்டை அருகே இவர் அரசு உரிமம் இல்லாமல் நடத்தி வரும் கல் குவாரி குறித்து கேட்டோம். இதனால் ஆத்திரமடைந்த பரத் ரெட்டி, கே. லட்சுமண், ராஜேஸ்வர் ஆகிய இரு தலித்துகளை கட்டையால் அடித்துள்ளார். மேலும், தங்களை விட்டு விடுமாறு கெஞ்சியபோதும், அவர்களை அருகே உள்ள ஒரு குட்டையில் நிற்க வைத்தார். மேலும், அந்த குட்டையில் இருந்த தண்ணீரை குடிக்க வற்புறுத்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இது அப்பகுதி யில் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது.

இதுகுறித்து நேற்று முன் தகவல் அறிந்த அபங்கபட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள பரத் ரெட்டியை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்