திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் மூலம் காணிக்கையாக வழங்கும் வெளிநாட்டு கரன்சிகளை இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு இந்திய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகளும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன. இவை பல ஆண்டுகளாக இந்திய ரூபாயாக மாற்றப்படாமல் தேங்கியுள்ளன.
இந்நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை நிர்வாக அலுவலகத்தில் அதிகாரி அனில்குமார் சிங்கால் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனில்குமார் சிங்கால் பேசும்போது, “வெளிநாட்டு கரன்சிகளை விரைவாக மாற்றுவதற்கு டெல்லியில் உள்ள ஆந்திர மாநில ரெசிடெண்ட் ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளிநாட்டு கரன்சி மற்றும் நாணயங்களை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமலையில் பூந்தி தயாரிக்க புதிய கட்டிடம் கட்டும் பணி குறித்தும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோன்று திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கூடுதலாக கட்டுவதற்கு தேவையான முதற்கட்ட பணிகளைத் தொடங்குவது அவசியம்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் இணை நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீநிவாச ராஜு, போலா பாஸ்கர் மற்றும் அனைத்துத் துறை தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago