முஸ்லிம் மக்கள் தொகை 2023-ல் 20 கோடியாக மதிப்பீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மாலா ராய் எழுப்பிய கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 14.2% முஸ்லிம்கள் உள்ளனர்.

அப்போது முஸ்லிம்களின் மக்கள்தொகை 17.2 கோடி யாகும். 2020 ஜூலையில் மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி, 2023-ல் நாட்டின் கணிக்கப்பட்ட மக்கள் தொகை 138.8 கோடியாகும்.

இதன்படி, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்த அதே 14.2% விகிதத்தைப் பயன்படுத்தினால், 2023-ல் முஸ்லிம்களின் மக்கள் தொகை 19.7 கோடியாக இருக்கும்.

2021-22-ல் மத்திய புள்ளிவிவரத்தின்படி, 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முஸ்லிம்களின் கல்வியறிவு விகிதம் 77.7% ஆகவும், அனைத்து வயதினரின் தொழிலாளர் விகிதம் 35.1% ஆகவும் உள்ளது. 2020-21-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களில் மேம்பட்ட குடிநீர் ஆதாரம் கொண்டவர்கள் 94.9% ஆகவும், 2014 மார்ச் 31-க்குப் பிறகு முதன்முறையாக புதிய வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய குடும்பங்கள் 50.2% ஆகவும் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE