ஒடிசா ரயில் விபத்து குறித்த அறிக்கை: முதல் முறையாக வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒடிசாவின் பாலசூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர்,1,000 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மாநிலங்களவையில் எம்.பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் ஒடிசா ரயில் விபத்து குறித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் வடக்கு கூம்டி நிலையத்தில் சிக்னல் மாற்றும் கருவியில் ஏற்பட்ட கோளாறும், எலக்ட்ரிக் லிஃப்டிங் பேரியரை மாற்றுவதற்காக நடைபெற்ற சிக்னல் பணியில் ஏற்பட்ட குறைபாடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளாறு காரணமாக தவறான பாதையில் ரயில் செல்ல பச்சை நிற சிக்னல் விழுந்ததாகவும், அதனால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE