ஜெய்ப்பூரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு; மக்கள் பீதி

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவானது.

இது தொடர்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் 4.4 ரிக்டராக பதிவானது. இது நிலத்துக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து 4 முறை: முதலில் அதிகாலை 4.09 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் 4.22 மணியளவில் 3.1 ரிக்டர், 4.25 மணியளவில் 3.4 ரிக்டர் என மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

அரைமணி நேரத்தில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். அதிகாலையில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். வாட்ஸ் அப், ட்விட்டர் என சமூக வலைதளங்கள் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து உற்றார், உறவினர்களின் நலன் விசாரித்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவலில்லை.

முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்ப்பூரில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன். மக்கள் அனைவரும் நலமா? என்று பதிவிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE