எதிர்க்கட்சிகளோடு இணையாதது ஏன்? - மாயாவதி விளக்கம்

By செய்திப்பிரிவு

லக்னோ: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோடு இணையாதது ஏன் என்பது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல்களை நாங்கள் தனித்தே எதிர்கொள்வோம். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகளோடு கூட்டணி அமைத்து நாங்கள் தேர்தலை எதிர்கொள்வோம்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தன்னைப் போலவே சாதிய எண்ணம் கொண்ட, முதலாளித்துவ சிந்தனை உள்ள கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கிறது. இவர்கள் யாருமே தலித்துகளுக்கோ, முஸ்லிம்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ எதையும் செய்தவர்களல்ல.

எல்லோருமே ஒன்றுதான். அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றியது கிடையாது. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் இதுதான் உண்மை. அதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் நாங்கள் சேரவில்லை" என்று மாயாவதி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE