இஸ்ரோவின் நிலவு ஆராய்ச்சியும் சந்திரயான் விண்கலமும்: ஆகஸ்ட் 2003 முதல் இப்போது வரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் என்ற திட்டத்தை முன்னெடுத்தது. இந்த ஆராய்ச்சி இதுவரை கண்டுள்ள வளர்ச்சி பற்றிய டைம்லைன் இதோ:

ஆகஸ்ட் 15, 2003: இந்தியாவின் அப்போதையப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், சந்திரயான் திட்டத்தை முதன்முதலாக அறிவித்தார்.
அக்டோபர் 22, 2008: சந்திரயான்-1 திட்டம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
நவம்பர் 8, 2008: சந்திரயான் -1 விண்கலம் வெற்றிகரமான நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
நவம்பர் 14,2008: சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்து பிரிந்த ஆய்வுக்கலன் நிலவின் தென் முனையில் மோதியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 28, 2009: சந்திரயான் -1 திட்டம் நிறைவுபெற்றதாக இஸ்ரோ அறிவித்தது.
ஜூலை 22, 2019: சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 20, 2019: சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
செப்டம்பர் 2, 2019: நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கிமீ உயரே விக்ரம் லேண்டர் விடுவிக்கப்பட்டது. ஆனால் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிமீ தொலைவில் இருந்து பூமியில் ஒரு கட்டுப்பாட்டு மையத்துக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
ஜூலை 14, 2021: சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுவதற்குத் தயராக உள்ளது.
ஆகஸ்ட் 23/24, 2023: அன்றைய தினம் தான் நிலவின் மேல்பரப்பில் சந்திரயான் -3 விண்கலம் நிலை கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE