சுவிட்சர்லாந்தில் இந்தியக் கள்ள ரூபாய் நோட்டுகள்

By செய்திப்பிரிவு

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் இந்தியக் கள்ள ரூபாய் நோட்டுகள் சுவிட்சர்லாந்தில் புழங்குவதாக அங்குள்ள உயர்மட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கள்ள நோட்டுக்களில் யூரோ அதிகமாகவும் அதற்கு அடுத்த இடத்தில் போலி டாலர் நோட்டுகளும் சுவிட்சர்லாந்தில் அதிகம் புழங்கி வருகின்றன. இதில் இந்தியக் கள்ள நோட்டுக்கள் எண்ணிக்கை அளவில் 3வது இடத்தில் உள்ளது.

சுவிஸ் போலீஸ் வெளியிட்டுள்ள கள்ள நோட்டு புள்ளி விவரங்களின் படி, 2013ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள யூரோக்கள் 2,394 ஆகும். அமெரிக்க டாலர்களில் 1,101 போலி நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு கணக்கின் படி 403 இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. பிடிபட்ட 403 கள்ள நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுக்கள் 380, கள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 23.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE