புதுடெல்லி: அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு 3-வது முறையாக அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது.
இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் எனவும் வரும் 31-ம் தேதிக்குள் அவர் பதவி விலக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அமலாக்கத் துறை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி அடைபவர்கள், பல்வேறு காரணங்களுக்காக ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய சட்டத் திருத்தங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஊழல் செய்பவர்கள் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத் துறையின் அதிகாரங்கள் அப்படியேதான் இருக்கும். எனவே, அமலாக்கத் துறைஇயக்குநராக யார் வந்தாலும், வாரிசு அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago