இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 2012-ல் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் தனிஷ் அன்சாரி, அப்தப் அலம், இம்ரான் கான், ஒபைத்-உர்-ரகுமான் ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு நாடு முழுவதும் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ள சதி திட்டம் தீட்டினர். இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), மத்திய அரசுக்கு எதிராக சதி செய்தல், தீவிரவாத செயலுக்கு நிதி திரட்டுதல், தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்தல், தீவிரவாத முகாம்களுக்கு ஏற்பாடு செய்வது, தீவிரவாத செயல்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது, தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது என சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க முடியும்.

டெல்லி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், கடந்த 10-ம் தேதி தீர்ப்பளிக்கப்படது. குற்றம் சாட்டப்பட்ட 4 தீவிரவாதிகளும், தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டதால், அவர்களை குற்றவாளிகளாக சிறப்பு நீதிபதி சைலேந்தர் மாலிக் அறிவிந்தார். அவர்களுக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE