பெங்களூரு: பெங்களூருவில் 17, 18-ம் தேதி களில் நடைபெறும் கூட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஓரணியாக போட்டியிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
» வடமாநிலங்களை புரட்டிப்போடும் பருவமழை | தத்தளிக்கும் டெல்லி, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம்
ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறுவிஷயங்கள் குறித்து விவாதித்தோம். வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைவரும் ஒன்று கூடவேண்டும்.
வரும் 17, 18-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வருகை தரவேண்டும். நம் நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கார்கே கூறியுள்ளார்.
சோனியா பங்கேற்க வாய்ப்பு
எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த சோனியா காந்தி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் செய்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago