பெங்களூரில் கன்னியாஸ்திரி பலாத்காரம்- வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டல்

By செய்திப்பிரிவு

பெங்களூரில் கன்னியாஸ்திரி ஒருவரின் முகத்தில் மயக்க மருந்து தெளித்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள், வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என கான்வென்டின் சுவரில் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் கல்லூரி மாணவி, 6 வயது பள்ளி மாணவி என அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பெங்களூரில் சனிக்கிழமை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெங்களூர் ஹென்னூர் பண்டே அருகிலுள்ள கான்வென்டில் ஆந்திராவைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த‌ புதன்கிழமை மதியம் 3 மணி அளவில் அவர் தனியாக இருந்தபோது, கதவை தட்டிய இருவர் அவருடைய முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேவை அடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் கான்வென்ட்டின் சுற்றுச் சுவரில், “நாங்கள் பலாத்காரம் செய்ததை செல்போனில் படம் பிடித்திருக்கிறோம். இதுபற்றி வெளியில் சொன்னாலோ, போலீஸிடம் புகார் செய்தாலோ உன்னைக் கொன்று விடுவோம். எங்களுக்கு பணம் கொடுத்தால் இந்த வீடியோவை அழித்து விடுவோம். இல்லாவிடில் இண்டர்நெட், தொலைக்காட்சி சேனல்களில் வெளியிடுவோம்” என எழுதிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கான்வென்ட்டின் தலைமை கன்னியாஸ்திரி கடந்த வியாழக் கிழமை ஹென்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை அறிந்த குற்றவாளிகள் அன்று நள்ளிரவே சுற்றுச்சுவரை சுற்றி மிளகாய் பொடியை தூவி யுள்ளனர். மேலும் தாங்கள் எழுதி யதை சிவப்பு நிற ஸ்கெட்ச் பேனாவில் அழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக ஹென்னூர் போலீஸார் 200-க்கும் மேற்பட்டோ ரின் நடவடிக்கைகளை கண் காணித்து வருகின்றனர்.

மேலும் சிலரின் செல்போன் எண்களையும் பரிசோதித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்ததில் 18 வயதுக்கும் குறைவான இருவர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரியின் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு கவுன்சலிங் கொடுப்

பதற்காக செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு உடல் ரீதியாக எவ்வித பிரச்சினையும் இல்லை என கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.​

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE