ஜம்மு - காஷ்மீரில் வெள்ளத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, சூரன்கோட் பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதியை சனிக்கிழமையன்று கடக்க முயன்றபோது 2 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை இந்திய ராணுவம் தீவிரமாக தேடிவந்தது.

இந்த நிலையில், சுபேதார் குல்தீப் சிங்கின் உடல் சனிக்கிழமை இரவும் தெலு ராமின் உடலை ஞாயிற்றுக்கிழமையும் ராணுவம் மீட்டது.

உயிரிழந்தவர்களின் உடலுக்குஅஞ்சலி செலுத்திய இந்திய ராணுவத்தின் 16வது படைப்பிரிவு அதிகாரிகள், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மூன்று நாட்களாக ஞாயிற்றுக்கிழமையும் கனமழை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து, ஜம்மு பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களான கதுவா, சம்பா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று வானிலை ஆய்வு மையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE