புதுடெல்லி: முஸ்லிம்களின் ஷரீயத் சட்டம் ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் வரை மணமுடிக்க அனுமதிக்கிறது. இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் கீழ் மும்பையில் செயல்படும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (ஐஐபிஎஸ்) பலதார திருமணம் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.
ஐஐபிஎஸ் நிறுவனம் கடந்த 1956-ல் டாடா மற்றும் மத்திய அரசுடன் இணைந்து துவக்கப்பட்டது. 1984-ல் இது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஐஐபிஎஸ் சார்பில், கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டிற்கு இடையில் திருமணமான பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஐஐபிஎஸ் பேராசிரியர்கள் ஹரிஹர் சாஹு, ஆர்.நாகராஜன் மற்றும் சைத்தாலி மண்டல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதன்படி, பலதாரத் திருமணங்கள் செய்த கிறிஸ்தவர்கள் 2.1 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாம் நிலையில் முஸ்லிம்கள் 1.9 சதவிகிதம் பலதார திருமணங்கள் புரிந்துள்ளனர்.இந்துக்கள் 1.3 சதவிகிதத்துடன் மூன்றாவது இடம் பெற்றுள்ளனர்.
எனினும், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களின் இடையிலான பலதாரத் திருமணங்களின் சத விகித வித்தியாசம் வெறும் 0.6 சதவிகிதம் மட்டுமே. சீக்கியர்களில் மிகக் குறைவான 0.5 சதவிகிதம் பலதாரத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சதவிகிதமானது, புத்த மதத்தினரில் 1.3% மற்றும் பெயர் குறிப்பிடாத இதர சமூகத்தினரில் 2.5% எனவும் உள்ளன. எனினும், இந்த எண்ணிக்கை கடந்த 2006 முதல் 2021 வரையில் படிப்படியாக குறைந்து வருகின்றன. ஆனால், பஞ்சாப்.சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான்,ஜார்க்கண்ட், மேகாலயா, திரி புரா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் பலதார மணம் குறைய வில்லை.
ஐஐபிஎஸ் ஆய்வுகளின்படி, பலதாரத் திருமணங்கள் வடகிழக்கு, தென் மாநிலங்கள் மற்றும் சிக்கிமிலும் அதிகமாக உள்ளன. தென் மாநிலங்களில் அதிகமாக தெலங்கானாவில் 2.9%, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா 2.4%, தமிழ்நாட்டில் 2 சதவிகிதங்களாக உள்ளன. அவர்களில் பெரும்பாலும் இந்துக்களே என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் பழங்குடியினத்தவர்களாக இருப்பதால் அங்கு பலதார திருமணம் அதிகம் உள்ளது. சட்டப்படி அனுமதி இருந்தும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலங்களிலும் பலதாரத் திருமணம் குறைவாக உள்ளது. உதாரணமாக, 100 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழும் லட்சத்தீவுகளில் 0.5% மற்றும் காஷ்மீரில் 0.4 சதவிகித பலதாரத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
2-ம் நிலையில் முஸ்லிம்கள் 1.9 சதவிகிதம் பலதார திருமணம் புரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago