அசோக் கெலாட் உடனான மோதலை மன்னிக்கவும் மறக்கவும் தயார் - சச்சின் பைலட் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உடனான தனது மோதலை மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறினார்.

ராஜஸ்தானில் கடந்த 2018-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது. கடந்த 2020-ல் முதல்வருக்கு எதிராக சச்சின் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சச்சின் பைலட் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் அசோக் கெலாட் உடனான மோதலை மறக்கவும் மன்னிக்கவும் தயாராகஇருக்கிறேன். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சமீபத்தில் சந்தித்தேன்.அவரது வார்த்தைகள் அறிவுரைகளை போலவே இருந்தன. அவர் எப்போதும் விரும்பத்தகாத எந்த வார்த்தையையும் பயன்படுத் துவதை தவிர்த்தார். ராஜஸ்தானில் வரவிருக்கும் தேர்தலில் ஒன்றாக சேர்ந்து போரிட தயாராக உள்ளேன்.

நான் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அனைவரையும் அரவணைத்துச் சென்றேன். இப்போது, முதல்வர் கெலாட்டும் அனைவரையும் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்.

கூட்டு முயற்சியால் மட்டுமே தேர்தலில் வெற்றி முடியும். தேர்தல் வெற்றிக்கு தங்கள் தனிப்பட்ட முயற்சியே போதும் என்று யாரும் கூறிவிட முடியாது.

வெற்றி வாய்ப்பே வேட் பாளர் தேர்வுக்கான ஒரே அளவு கோலாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப் பளிக்க வேண்டும்.

இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்