புதுடெல்லி: வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களின் குளிர்சாதனம் மற்றும் எக்ஸிக்யூடிவ் பெட்டிகளின் டிக்கெட் கட்டணத்தை 25 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
பயணிகளிடையே ரயில் பயணங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து விரைவு ரயில்களின் குளிர்சாதன பெட்டிகள், எக்ஸிக்யூடிவ் வகுப்புகள் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற அதிவிரைவு ரயில்களில் உள்ள சொகுசு பெட்டிகளான அனுபதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகளின் கட்டணத் தொகையில் 25 25 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண குறைப்பு சலுகையானது, அடிப்படை டிக்கெட் விலையில் இருந்து மட்டுமே குறைக்கப்படும். ஜிஎஸ்டி, முன்பதிவு கட்டணம், அதிவிரைவு கூடுதல் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது.
இந்தக் கட்டண சலுகை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. அதேநேரம் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தக் கட்டணச் சலுகை பொருந்தாது என்றும் ரயில்வே வாரியம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
» வன்முறையில் முடிந்த மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: பறிபோன கட்சித் தொண்டர்கள் 12 பேரின் உயிர்!
» முகத்தில் சிறுநீர் கழித்த நபரை விடுவிக்கக் கோரும் பாதிக்கப்பட்ட ம.பி இளைஞர் - காரணம் என்ன?
இருக்கை பற்றாக்குறையின் அடிப்படையில் வழங்கப்படும் இந்தச் சலுகை திட்டம், விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் விடப்படும் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இந்த உத்தரவில், "பயணத்தின் கடைசி 30 நாட்களில் இருக்கை பற்றாக்குறை 50 சதவீதம் என்ற அளவுக்கும் குறைவாக இருக்கும் நிலையில் இந்த கட்டணச் சலுகை வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago