பெங்களூரு: கடந்த 2021-ம் ஆண்டு பாஜக ஆட்சியின்போது, நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் சித்தராமையா 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக கர்நாடக மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படும். இந்த புதிய கல்விக் கொள்கை கர்நாடக மாநிலத்தின் வரலாறு, சமூக, பொருளாதார, கலாச்சார அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்காக வல்லுநர் குழு உருவாக்கப்பட்டு இந்தகல்வித் திட்டம் நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சித்தராமையா அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago