பிஹாரில் 2019-க்குள் அனைவருக்கும் கழிவறை வசதி

பிஹார் மாநிலத்தில் இன்னும் ஐந்தாண்டுகளில் திறந்தவெளி கழிவறை முறையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 2019-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கழிவறை வச தியை ஏற்படுத்த முயன்று வருவதா கவும் பிஹார் அரசு கூறியுள்ளது.

2013-2014-ம் ஆண்டில் 12,12,716 கழிவறைகளைக் கட்ட பிஹார் அரசு இலக்கு நிர்ணயித் தது. ஆனால் இதுவரை 1,61,646 கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன என்று அம்மாநிலத்தின் பொது சுகாதாரத் துறை அமைச்சர் மஹாசந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பிஹார் மாநிலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி தாமதமாவதால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை.

எனினும், இந்தப் பிரச்சினை யின் முக்கியத்துவம் கருதி திறந்தவெளி கழிவறை முறையை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் 2022-ம் ஆண்டுக்கு முன்பே அதாவது 2019ம் ஆண்டுக்குள்ளாகவே பிஹாரில் திறந்தவெளி கழிவறை முறையை முடிவுக்குக் கொண்டு வர திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இத்திட்டம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் நடைமுறைப்படுத்தப்படும், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE