பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத இலவச திட்டங்களை அறிவித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், பட்டதாரிக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தது.
அதன்படி கடந்த ஜூன் 13-ம்தேதி அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடங்கிவைத்தார். இதையடுத்து வறுமைகோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் ‘அன்ன பாக்யா' திட்டத்தை ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய உணவு கழகம், வெளிச்சந்தையில் அரிசி விற்பனை செய்வதில்லை என தெரிவித்தது.
இதனால் கர்நாடக அரசுக்கு போதுமான அரிசி கிடைக்காததால், அன்ன பாக்யா திட்டத்தை தொடங்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் முதல்வர் சித்தராமையா, ‘‘அரிசி கிடைக்காததால் ஜூலை 1-ம் தேதி முதல் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும்’’ என அறிவித்தார்.
அதன்படி வறுமை கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் ‘அன்ன பாக்யா' திட்டத்தை நேற்று பெங்களூருவில் சித்தராமையா தொடங்கி வைத்தார். அரிசி தட்டுப்பாடு காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசியும், மீதமுள்ள 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணமாக, அதாவது 1 கிலோவுக்கு ரூ.34 வீதம் ரூ.170 வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கிரஹ ஜோதி திட்டத்தின்கீழ் மாதம் 200 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். வருகிற ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தில் இருந்து 200 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் குறைக்கப்படும் என தெரிவித்தார்.
» நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20-ல் தொடங்கும்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு
» மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பணிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மக்களின் உணவு பழக்கத்துக்கு ஏற்றவாறு அரிசிக்கு பதிலாக கேழ்வரகு, சோளம் ஆகியவற்றை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். மத்திய அரசிடம் இருந்து அரிசி கிடைக்கும் வரை பணம் வழங்கப்படும். அரிசி கிடைத்த பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு கே.ஹெச்.முனியப்பா தெரிவித்தார்.
பாஜக போராட்டம் அறிவிப்பு: இதனிடையே முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா, ‘‘காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டது. 10 கிலோ இலவச அரிசி வழங்காமல் மக்களை ஏமாற்றியுள்ளது. 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாகக்கூறி, மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். காங்கிரஸ் அரசை கண்டித்து 4-ம் தேதி விதான சவுதா வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago