தலித், பெண்கள் உள்ளிட்ட 17 பேரை கோயில் அர்ச்சகர்களாக்கிய ராஜஸ்தான் அரசு: பிராமணர்கள் போராட்ட எச்சரிக்கை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ராஜஸ்தானில் ’தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் நிர்வாகங்களை கவனிக்கும் அறநிலையத்துறை அதற்கான அர்ச்சகர்களையும் நியமிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. இப்பணிக்கு கடைசியாக 2014-ல் விளம்பரம் அளிக்கப்பட்டு சுமார் 9 வருடங்களுக்கு பின் 65 அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டனர். அதன் பிறகு தற்போதையகாங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

அந்த 17 பேரில் 8 பெண்கள், தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராஜஸ்தானின் பிராமணர் சமுதாயத்தினர் இடையே புதிய நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ராஜஸ்தானின் சர்வ பிராமின் மகாசபாவின் தலைவரான தினேஷ் சர்மா, அரசின் இந்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், மாநிலம் முழுவதிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிராமணர்களின் விப்ரா பவுண்டேசன்ஸ் எனும் அமைப்பு, ராஜஸ்தானின் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேரில் சந்தித்து இதுதொடர்பாக புகார் மனு அளித்துள்ளது. அதில், முதல்வர் அசோக் கெலாட், அர்சகர்கள் நியமனத்தில் தவறான வழிமுறைகளை பின்பற்றியதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக, அரசு விதிமுறைகளின்படி சம்ஸ்கிருதம்அறிந்தவர்கள் அர்சகர்களாக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த விதியில் பிராமணர்கள் அல்லாதவர்களையும், பெண்களையும் அமர்த்தக் கூடாது என குறிப்பிடப்படவில்லை எனவும் ராஜஸ்தான் அரசு விளக்கம் அளித்து உள்ளது.

வழக்கமாக பிராமணர்கள் மட்டுமே இப்பணியில் அதிகமாக உள்ளனர். ராஜஸ்தானின் சில பகுதிகளில் வழிவழியாக ஒரே பரம்பரையில் வந்த குறிப்பிட்ட சமூகத்தின் பிற்படுத்தப்பட்டவர்களும் அர்ச்சகர்களாக இருந்துள்ளனர்.

அரசர்களின் ஆட்சி காலத்தில் ராஜஸ்தானின் ஆம்பர் கோட்டையில் ஒரு துர்கா கோயிலில் ஒரு பெண் அர்ச்சகர் இருந்துள்ளார். ஆனால், தலித் சமுதாயத்தினர் இதுவரையும் அர்ச்சகர்களாக அமர்த்தப்படவில்லை எனக் கருதப்படுகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைசேர்ந்தவரான முதல்வர் அசோக்கெலாட் அரசுக்கு அவர் அர்ச்சகர்களாக நியமித்த சமூகத்தினரின் வாக்காளர்கள் ஆதரவு ஆட்சி அமைக்க உதவியது. இதை தக்கவைத்துக் கொள்ளவே இந்த அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட் டிருப்பதாகத் தெரிகிறது.

அதேசமயம், பிராமணர் உள்ளிட்ட இந்துத்துவா வாக்குகளை கவரவும் முதல்வர் அசோக் கெலாட் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். கோயில்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்கி வருகிறார். சமீப நாட்களாக முதல்வர்கெலாட் ராஜஸ்தானின் உள்ள கோயில்களுக்குச் செல்வதும் அதிகரித்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இவை, அடுத்த வருடம் வரும்மக்களவைத் தேர்தலின் அரை இறுதிப் போட்டியாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்