அயோத்தி ராமர் கோயில் பாதுகாப்புக்கு ரூ.38 கோடியில் திட்டம்

By செய்திப்பிரிவு

லக்னோ: அயோத்தியில் கட்டப்பட்டு வரும்ராமர் கோயிலின் பாதுகாப்பிற்காக ரூ.38 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நிர்மான் நிகாமிடம் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்டப்பட்டு வரும் ராமர் நினைவுச் சின்னத்தின் பாதுகாப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் விவரிக்கும் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

வரும் நவம்பர் மாதத்துக்குள் பாதுகாப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட திட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலம், நீர், காற்று போன்ற இயற்கை அச்சுறுத்தல்களிலிருந்து ராமர் கோயிலை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நகர நிர்வாகம் கோயிலை வெளியில் இருந்துபாதுகாக்கும். உள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை மேற்பார்வையிடும். கோயிலுக்கு வெளியே துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படுவார்கள். சிசிடிவிகேமராக்கள் மற்றும் பிறநவீன கருவிகள் கோயில் பாதுகாப்புக்கு நிறுவப்படும்.

அனைத்து சிசிடிவி கேமராக்க ளையும் கண்காணிக்க ஒருங் கிணைந்த கட்டுப்பாட்டு மையம்உருவாக்கப்படும். இதற்கான திட்டம் அரசிடம் தெரிவிக்கப்பட்டு ரூ.38 கோடிக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை உருவாக்க மாநில அரசு அனைத்துஉதவிகளையும வழங்கி வருவதாக மூத்த அரசு அதிகாரி கவுரவ் தியால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்