ஃபார்சி வெப் தொடரை பார்த்து உ.பி.யில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டை அச்சடித்து வெளியிட்ட கும்பல் சிக்கியது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த பொற்கொல்லர் இர்ஷாத். இவர் சமீபத்தில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ‘ஃபார்சி’ என்ற பாலிவுட் வெப் தொடரை பார்த்துள்ளார். இது கள்ளநோட்டு அச்சடித்து, புழக்கத்தில் விடுவது பற்றிய படம். கரோனா தொற்று பரவிய காலத்தில் அதிக இழப்பை சந்தித்த இர்ஷாத்துக்கு, ‘ஃபார்சி’ வெப் தொடரை பார்த்தபின் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அப்போதுதான், ரூ.2 ஆயிரம்நோட்டை திரும்ப பெறுவதாகரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, ரூ.2000 கள்ள நோட்டை அச்சடித்து,அதை குறைந்த தொகைக்கு பரிமாற்றம் செய்தால், அதை வாங்க பலர் முன்வருவர் என்ற யோசனை இர்ஷாத்துக்கு தோன்றியது.

இதை சாம்லி மாவட்டத்தின் கைரானா பகுதியில் வசிக்கும் தஜீம்என்ற தனது நண்பனிடம் கூறியுள் ளார். அவருக்கு பல மாநிலங்களில் வர்த்தக தொடர்புகள் உள்ளன. இதனால் கள்ள நோட்டைஅச்சடித்து, அவற்றை பல மாநிலங்களில் பரிமாற்றம் செய்ய அவரும் முன்வந்தார்.

இருவரும் பல இணையதளங்களில் தேடி சிறப்பு மைகளை வாங்கிரூ.2,000 கள்ள நோட்டு அச்சடிக்கும்தொழிலில் இறங்கினர். அவற்றைகுறைந்த மதிப்புக்கு பரிமாற்றம் செய்தனர். இதனால் டெல்லி மற்றும்அருகில் உள்ள மாநிலங்களில் திடீரென ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கம்அதிகரித்தது. பலரும் வங்கிகளில் ரூ.2,000 கள்ள நோட்டுகளை மாற்றுவதற்கு வந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், இந்த கள்ளநோட்டு கும்பலை பிடிக்கும் முயற்சியில் டெல்லி காவல் துறையின் தனிப்படை போலீஸார் இறங்கினர்.

கைரானா பகுதியைச் சேர்ந்தவர் ரூ.2,000 நோட்டுகளுடன் டெல்லி வருவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. அவரை போலீஸார் கடந்த 21-ம் தேதி மடக்கி பிடித்தனர். அவரிடம் ரூ.2.5 லட்சத்துக்கு ரூ.2,000 கள்ள நோட்டுகள் இருந்தன. அவரிடம் நடத்திய விசா ரணையில், பொற்கொல்லராக இருக்கும் தனது நண்பர் இர்ஷத் தனது கடையில் ரூ.2,000 கள்ள நோட்டுகளை அச்சடித்ததாகவும், இதை புழக்கத்தில் விட தான் உதவி செய்தேன் என்றும் கூறினார்.

இதையடுத்து இர்ஷாத்தை கைது செய்த போலீஸார், அவரிடம்இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000 கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்தனர். இர்ஷாத்தின் கடையில் இருந்து கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், காகிதங்கள், மைகள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ‘ஃபார்சி’ வெப் தொடரை பார்த்து கள்ள நோட்டு அச்சடிக்கும் எண்ணம் ஏற்பட்டது’’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்