தலைமறைவு ஐ.ஏ.எஸ். அதிகாரி பற்றி தகவல் அளித்தால் பரிசு: ராஜஸ்தான் மாநில காவல்துறை அறிவிப்பு

ராஜஸ்தானில் பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.பி.மொகந்தி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

பலாத்கார வழக்கில் கைது செய்யப்படுவதை மொகந்தி தவிர்த்து வரும் நிலையில், அவரை தலைமறைவு குற்றவாளியாக ஜெய்ப்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என ஜெய்ப்பூர் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான மொகந்தி மீது சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுக்கு தயராகும் பெண் ஒருவர் பலாத்கார புகார் அளித்துள்ளார். போட்டித் தேர்வில் எளிதில் வெற்றிபெற உதவுவதாகக் கூறி மொகந்தி தன்னை பலமுறை பலாத்காரம் செய்தார் என்று அப்பெண் கூறியிருந்தார்.

ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பணிகள் மேல்முறையீட்டு தீர்ப் பாயத்தின் தலைவராக நியமிக் கப்பட்ட மொகந்தி, கடந்த பிப்ரவரி மாதம் மாநில அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE