புதுடெல்லி: இந்த ஆண்டு முதல் தூதரக உறவாக உயர்ந்துள்ள எகிப்து உனான பலதரப்பட்ட உறவுகள், மத்திய கிழக்கு நாட்டுக்கான பிரதமர் மோடியின் வருகையால் மேலும் வலுடையும் என்று எகிப்துக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.
எகிப்துக்கான இந்தியத் தூதர் அஜித் குப்தே அளித்த பேட்டி ஒன்றில், “ஜூன் 24 முதல் 25 வரையிலான பிரதமர் மோடியின் கெய்ரோ பயணத்தை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இந்தப் பயணம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்தர்ப்பமாகும். ஏனென்றால், இருநாடுகளுக்கும் இடையிலான இந்திய பிரதமர் ஒருவரின் இருதரப்பு பயணம் இதற்கு முன்பாக 1997-ல் தான் நடந்தது.
பாதுகாப்பு உறவு: எகிப்து மற்றும் இந்தியாவுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகள் உள்ளன. இந்த இருநாடுகளும் கூட்டுப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் 30 இந்திய பாதுகாப்புக் குழுக்கள் எகிப்து சென்றுள்ளன, எகிப்தில் இருந்து ஏழு பாதுகாப்புக் குழுக்கள் இந்தியா சென்றுள்ளன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு நடந்த இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து ராணுவ வீரர்கள் அணித்துச் சென்றதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். முதன்முறையாக இருநாட்டு வீரர்களும் ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தில் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டது.
தூதரக உறவு: இருநாட்டு மக்களுக்கு இடையில் நல்ல உறவு நிலவுகிறது என்றபோதில் அதில் சிறப்பு அந்தஸ்து எதுவும் இல்லை. எனவே கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வரும் வணிகம், பாதுகாப்பு, மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மனதில் கொள்ளப்பட்டது. வழக்கமாக தூதரக உறவு என்ற சொல் மிகவும் வரையறுக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாடு குறிப்பிடத்தகுந்த அளவில் சிறப்பான உறவினை பேண விரும்பும் நாட்டுடன் மட்டுமே அதனைப் பயன்படுத்தப்படுகிறது.
ஜி-20-க்கு 9 விருந்தினர் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் எகிப்தும் ஒன்று. அரபு நாடுகளில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடு எகிப்து. மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. அரபு நாடுகளிடையே அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது. அதனால் அது பிராந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பினை செய்கிறது. மேலும் அது வளரும் நாடுகளின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. அதனால் ஜி-20-யில் எகிப்தின் பங்கேற்பு குறிப்பிடத்தகுந்த பயனைத் தரும்.
பிரதமரின் வருகை: எகிப்தில் தங்கி இருக்கும்போது பிரதமர் மோடி ஹிலியோபோலிஸ் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்கிறார். காமன்வெல்த்தால் கட்டப்பட்ட இந்த நினைவுச் சின்னம் முதல் உலகப் போரின்போது எகிப்தில் நடந்த பல்வேறு போர்களில் உயிரிழந்த 3,799 இந்திய வீரர்களின் நினைவாக கட்டப்பட்டது. அவர்கள் ஒட்டோமான் தாக்குதலில் இருந்து எகிப்தை முக்கியமாக பாதுகாத்தனர். அதேபோல் தாவூதி போரா சமூகத்தினரின் உதவியால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அல் ஹக்கிம் மசூதிக்கும் பிரதமர் செல்கிறார். அதேபோல் ஏமனில் உள்ள முதல் உலகப் போரி்ல் உயிர் நீத்த 600 இந்திய வீரர்களுக்கான போர் நினைவு சின்னத்துக்கும் பிரதமர் செல்கிறார். எனவே, அவை ஒரு நெகிழ்ச்சியான தருணங்களாக இருக்கும்.
பிரதமர் மோடி இங்கிருக்கும் இந்திய சமூகத்தினரையும் சந்திக்கிறார். எகிப்தில் மிகவும் குறைவான இந்தியர்களே இருக்கிறார்கள். சுமார் 3,600 இவர்களில் மாணவர்களும் உண்டு. அவர்கள் எகிப்துக்கு முதல் முறையாக வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க மிகவும் ஆவலுடன் உள்ளனர். எனவே, நாங்கள் ஒரு சமூதாய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி அறிக்கை: முன்னதாக, அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு அரசு முறைப் பயணமாக கிளம்புவதற்கு முன்பு செவ்வாய்க்கிழமை தனது பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், நமக்கு மிகவும் நெருக்கமான நட்பு நாட்டிற்கு முதல்முறையாக பயணம் மேற்கொள்வதில் மிகவும் ஆவலாக உள்ளேன். இந்த ஆண்டு நடந்த நமது குடியரசு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் சிசியை அழைத்து உவகையாக இருந்தது. சில மாதங்களுக்கு நடந்திருக்கும் இந்த இரண்டு பயணங்களும் எகிப்துடன் வேகமாக வளர்ந்து வரும் நமது கூட்டுறவை பிரதிபலிக்கிறது. அது அதிபர் சிசியின் வருகையால் ராஜாங்க ரீதியாக உயர்வடைந்தது.
இரு நாடுகளின் குடிமை மற்றம் பன்முகப்பட்ட உறவுகளுக்காக எகிப்து அதிபர் சிசி மற்றும் அந்நாட்டு அரசின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்த இருக்கும் பேச்சுவார்த்தையை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
56 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago