ராஜஸ்தான் | மனைவிக்கு ரூ.55 ஆயிரம் ஜீவனாம்சத்தை 280 கிலோ நாணயமாக வழங்கிய கணவன்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தெரு வியாபாரி தஸ்ரத் குமாவத். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சீமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். அதன்பின், ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் தஸ்ரத் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்து வரும் குடும்பநல நீதிமன்றம், மனைவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.55 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த ஜீவனாம்ச பணத்தை அவர் வழங்கவில்லை. அதனால் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்நிலையில், தஸ்ரத்வழக்கறிஞர் குப்தா நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுகையில், ‘‘தஸ்ரத் தெரு வியாபாரி. அவர் ஏற்கெனவே கடன் உட்பட பல பணப் பிரச்சினைகளில் இருக்கிறாார். அவரால் ஜீவனாம்சம் வழங்க இயலவில்லை’’ என்று கூறினார். அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து தெரு வியாபாரியிடம் இருந்து ஜீவனாம்ச தொகையை வசூலிக்க நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. அது பின்னர் கைது வாரன்ட்டாக மாறியது. அதன்பின், தஸ்ரத்தை ஜெய்ப்பூர் போலீஸார் கைது செய்து கடந்த 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சிறிது நேரத்தில் தஸ்ரத்தின் உறவினர்கள் சிலர் ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் அடங்கிய 7 மூட்டைகளை கொண்டு வந்தனர். அதில் ரூ.55 ஆயிரம் ஜீவனாம்சத்துக்கான நாணயங்கள் இருந்தன.

தஸ்ரத்தின் வழக்கறிஞர் குப்தா கூறும்போது, ‘‘அந்த நாணயங்கள் நாட்டில் செல்லத்தக்கவை என்பதால், அவற்றை ஏற்க வேண்டும். மேலும், தஸ்ரத் ஒரு தெரு வியாபாரி. அவருக்கு பெரும்பாலும் நாணயங்களாகத்தான் வருவாய் வருகிறது’’ என்று வலியுறுத்தினார்.

ஆனால், சீமாவின் வழக்கறிஞர் ராம்பிரகாஷ் குமாவத் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘மனைவியை சித்ரவதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் இவ்வாறு செய்கிறார். கடந்த 11 மாதங்களாக அவர் ஜீவனாம்சம் வழங்கவில்லை. இப்போது நாணயங்களாக தருகிறார். இவற்றை எண்ணி முடிக்கவே 10 நாட்களாகும்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ‘‘அந்த நாணயங்களை ஆயிரம் ரூபாய்களாக பிரித்து 55 பொட்டலங்களாக கொண்டு வரவேண்டும். அடுத்தவிசாரணை வரும் 26-ம் தேதி நடைபெறும்’’ என்று உத்தரவிட்டது. மேலும், ரூ.1 லட்சம் பிணைத் தொகையில் தஸ்ரத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்