புதுடெல்லி: “ஆபரேஷன் கவாச்’’ நடவடிக்கையின் கீழ் டெல்லியில் போதை மருந்து கடத்தலுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவினர் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
போதைப் பொருள் பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த"ஆபரேஷன் கவாச்" நடவடிக்கை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு எதிராக குற்றப்பிரிவு காவல் துறை கடும் நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தேசிய தலைநகரில் திங்கள்கிழமை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
முன்னதாக, மே 12-13 தேதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் மற்றும் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக 43 பேரை போதைப் பொருள் தடுப்பு அதிரடிப் படையினர் கைதுசெய்தனர்.
» மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
அத்துடன் 35 கிலோ ஹெராயின், 15 கிலோ கோகைன், 1500ஹெம்ப், 230 பாப்பி, 10 கிலோசாராஸ், மதுபானங்கள் உள்ளிட்டபல கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியதாக காவல் துறை குற்றப்பிரிவு ஆணையர் ரவீந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago