காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 லக்ஷர் -இ- தொய்பா தீவிரவாதிகள் சனிக்கிழமை காலை சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தலைமை கமாண்டர் வாசிம் ஷா ஆவார்.
இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், ''புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், அங்கு தீவிரவாதிகள் மறைந்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்த துப்பாக்கித் தாக்குதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இருவரும் உள்ளூர் ஆட்களான ஷா மற்றும் நாசிர் அகமது கான் என்பது பின்னர் தெரியவந்தது'' என்று தெரிவித்துள்ளனர்..
யார் இந்த வாசிம் ஷா?
தெற்கு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் உள்ள தீவிரவாதிகளின் கோட்டையான ஹெஃப்பின் தலைவராக அறியப்பட்டவர் வாசிம் ஷா. அவரின் செயல்பாடுகளைக் காஷ்மீர் காவல்துறை தொடர்ந்து கவனித்து வந்தது.
'அபு ஒசாமா பாய்' என்றும் அறியப்படும் ஷா, 23 வயது இளைஞர். ஏராளமான தீவிரவாதக் குற்ற வழக்குகளில் தேடப்பட்டவர். கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்.
2014-ல் தீவிரவாதக் குழுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். கடந்த ஆண்டு தெற்கு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்.
பழக்கடை வியாபாரத்தை மேற்கொண்டுவந்த மொகமது ஷாவின் மகன். சிறு வயதில் இருந்தே லக்ஷர் -இ- தொய்பாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
பாதுகாப்புப் படையினர் மீது ஏராளமான தாக்குதல்களை மேற்கொண்ட ஷாவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago