ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் அவருக்கு தங்க மயில் விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு அவர் பேசும்போது, “பங்குதாரர்களுக்கு நிறுவனங்கள் எவ்வாறு பதில் சொல்ல கடமைப்பட்டதோ அவ்வாறே சாமானிய மக்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டவன். இந்த விருது எனக்குள்ள கடமைகளை நினைவூட்டுகிறது. 2017-18-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆந்திர பிரதேசம் 11.72 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இது நாட்டின் சராசரி வளர்ச்சியை விட இரண்டு மடங்காகும்” என்றார்.
மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசும்போது, “உலகில் ஆங்கிலம் அதிகம் பேசுவோர் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. தொழில் நுட்பத்தில் இந்தியா வலுமையாக உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் இந்தியர்கள் தான் தலைமை பொறுப்பு வகித்து வருகின்றனர். ஆந்திராவில் தொழில் தொடங்க நாங்கள் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம். வரும் 2029-ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago