நியூயார்க்: ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் யோக அமர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.
யோகா பயிற்சியால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜூன் 21-ம் தேதியை யோக தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஐ.நா. சபை, ஜூன் 21-ம் தேதி உலக முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படும் என்று 2014 டிசம்பரில் அறிவித்தது.
இந்த நிலையில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் 9-வது சர்வதேச யோகா தின கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் நடைபெறும் யோகா அமர்வுக்கு பிரதமர் மோடி தலையைமையேற்பது இதுவே முதல்முறை.
» மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கலவரம் நீடிப்பு - மத்திய இணை அமைச்சரின் வீட்டுக்கு தீ வைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உள்ள வடக்கு புல்வெளியில் ஜூன் 21-ம்தேதி காலை 8 முதல் 9 மணி வரை சர்வதேச யோகா அமர்வு நடைபெறவுள்ளது. இதில், ஐ.நா.வின் உயர்நிலை அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், உலகளாவிய புலம்பெயர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago
இந்தியா
2 days ago