ஆந்திர மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தெரிவித்தார்.
விஜயவாடாவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நதிகள் இணைப்பு திட்டம் மூலம்தான் நாட்டில் வளர்ச்சி ஏற்படும். இதை முதலில் செய்து காட்டியவர் முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். நதிகளை இணைப்பதுடன் அவற்றைப் பராமரிப்பதும் அவசியமாகும். நதிகளை இணைப்பதன் மூலம் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பிரச்சினை தீரும். தண்ணீர் பிரச்சினை தீர்ந்தால் விவசாயம் செழிக்கும். விவசாயம் செழித்தால் நாட்டில் வளம் பெருகும். வளம் பெருகினால் நாடு அனைத்து துறையிலும் முன்னேற்றம் அடையும்.
தெலங்கானாவைப்போல ஆந்திராவிலும் தெலுங்கு மொழியை கட்டாயமாக்க வேண்டும். ஆந்திராவில் வேலை வேண்டுமென்றால் தெலுங்கு மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். ஆங்கிலம் மீது மோகம் இருக்கலாம், தவறில்லை. ஆனால் தாய்மொழி மீது பற்று இருப்பது அவசியம். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
இவரை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, “புதிய ஆந்திர மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக இருக்கிறது. இங்கு புதிதாக 4 தேசிய நெடுஞ்சாலை கள் அமைய உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய கடல்சார் திட்டங்களும் அமைய உள்ளன” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago