ஆந்திராவில் கட்சி தாவல் விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்

By என்.மகேஷ் குமார்

தனது கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவிய 20 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஆந்திராவில் 2014 தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 68 பேர் வெற்றி பெற்றனர். இதில் 21 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சர் பதவி வழங்கினார்.

இந்நிலையில், கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சபாநாயகர் கோடல சிவப்பிரசாத், ஆளுநர் நரசிம்மன் ஆகியோரிடம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் புகார் செய்தார். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதையடுத்து கட்சி தாவிய 20 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க வலியுறுத்தி, குளிர்கால கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாக ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், “எங்களது கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சியில் இணைந்துள்ளனர். இது அரசியல் சாசனத்துக்கு, மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதுகுறித்து சபாநாயகரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்