ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூன் 16) காலை நடத்திய என்கவுன்ட்டரில் 5 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜாமகுண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடந்த தேடுதல் வேட்டையில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்ட்டர் இன்று அதிகாலை தொடங்கியது. வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் ஜாமகுண்ட் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்தத் தகவலின் அடிப்படையில் என்கவுன்ட்டர் மேற்கொள்ளப்பட்ட்து" என்றார்.
காஷ்மீர் கூடுதல் டிஜிபி விஜய குமார் கூறுகையில், "என்கவுன்ட்டரில் ஐந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago