சிவப்பு நாடா முதல் சிவப்பு கம்பளம் வரை.. - அமித் ஷா பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் சிவப்பு நாடாவிலிருந்து சிவப்பு கம்பளம் வரையிலான பயணத்தை இந்தியா சாதித்துள்ளது. தொந்தரவு இல்லாத வணிகச் சூழலை உருவாக்கி நாட்டை அந்நிய நேரடி முதலீட்டுக்கு உகந்த இடமாக மோடி அரசு மாற்றியுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் எளிதில் தொழில் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் சிவப்பு நாடாவில் இருந்து சிவப்புக் கம்பளம் வரையிலான பயணத்தை இந்தியா சாதித்துள்ளது.

அனுமதி எளிது..: இந்தியாவில் தொந்தரவு இல்லாத வணிக சூழலை உருவாக்குவதற்காக திறன் வாய்ந்த வரிவிதிப்பு முறை, முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கைகள், எளிதான அனுமதி ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதன் மூலம் இந்தியாவை அந்நிய நேரடி முதலீட்டுக்கு உகந்த இடமாக அவர் மாற்றியுள்ளார்.

ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை, டிஜிட்டல் மாற்றம் என எதுவாக இருந்தாலும் வளர்ச்சியை எளிதாக்குவதற்கான அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் புதுமை மற்றும் வளர்ச்சியை தூண்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE