புதுடெல்லி: மாநில அரசுகளுக்கு வரி பங்கீடாக ரூ.1.18 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மாநில அரசுகளுக்கு 3-வது தவணை வரி பங்கீடாக ரூ.1,18,280 கோடியை மத்திய அரசு ஜூன் 12-ம் தேதி விடுவித்துள்ளது. இது வழக்கமாக மாதந்தோறும் விடுவிக்கப்படும் ரூ.59,140 கோடியைவிட அதிகம்” என கூறப்பட்டுள்ளது.
ஜூன் 2023-ல் விடுவிக்க வேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக ஒரு தவணைத் தொகைவழங்கப்பட்டுள்ளது. மூலதன செலவை விரைவுபடுத்தவும், வளர்ச்சி அல்லது நலத்திட்டங்களுக்கான செலவை சமாளிக்கவும், முன்னுரிமை திட்டங்களுக்கான ஆதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
14 தவணைகளாக..: மத்திய அரசால் ஒரு நிதியாண்டில் வசூலிக்கப்படும் வரித் தொகையில் 41 சதவீதத்தை 14 தவணைகளாக மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago