சூரியகாந்தி விதைக்கு எம்எஸ்பி.யை உயர்த்தக் கோரி டெல்லி நெடுஞ்சாலையை வழிமறித்து விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்தக் கோரியும், விவசாயிகளைக் காப்பாற்றக் கோரியும் ஹரியாணாவின் குருஷேத்ராவில் விவசாயிகள் டெல்லி செல்லும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

ஹரியாணா மாநிலத்தில் சூர்யகாந்தி பயிரை விளைவித்த விவசாயிகள், அந்தப் பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) அரசு அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தார். ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

ஆனால், சூர்யகாந்தி பயிருக்கு, ஹரியாணா அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை போதாது என்றும் கூடுதல் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும் என்றும் நேற்று குருஷேத்ரா மாவட்டம் பிப்லி கிராமத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்துக்குப் பின்னர் அவர்கள் டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவியுங்கள், விவசாயிகளைக் காப்பாற்றுங்கள் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் டெல்லிக்கு செல்லும் நெடுஞ்சாலை எண் 44-ல்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார், அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் டெல்லி-சண்டிகர் வழித்தடத்தில் திருப்பி விட்டனர்.

இந்த மகாபஞ்சாயத்துக் கூட்டத்தில் ஏராளமான ஹரியாணா, பஞ்சாப், உ.பி. மாநில விவசாயிகள் பங்கேற்றனர். குவிண்டால் ஒன்றுக்கு ஆதரவு விலையாக ரூ.6,400 வழங்க வேண்டும் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மகா பஞ்சாயத்துக் கூட்டத்தில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்துள்ள பாலியல் புகார் பிரச்சினையிலும், வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகிறார் பஜ்ரங் பூனியா என்பது குறிப் பிடத்தக்கது. இந்த மகா பஞ்சா யத்து கூட்டத்தில் பாரதீய கிசான்யூனியன் (சாருனி பிரிவு) விவசாயிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்