புதுடெல்லி: அரசு வழங்கிய தனித்துவ மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை (யுடிஐடி) பயன்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு தனி அடையாள அட்டைகளை வழங்க இந்திய ரயில்வே துறை கொள்கை முடிவெடுத்துள்ளது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ரயில்வேயின் கொள்கை முடிவில் தலையிட மறுத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ‘‘புகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டை’’ வழங்குவதற்கு ரயில்வேகொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், மாற்றுத்திறனாளிகள் இனி டிக்கெட்டுகளை வாங்கும்போது சலுகைகளைப் பெற அவ்வப்போது சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று ரயில்வே கூறியுள்ளது.
» மத்திய பிரதேசத்தில் 220 மாத பாஜக ஆட்சியில் 225 ஊழல்கள் நடந்துள்ளன - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
அதன் அடிப்படையில் பார்க்கும்போது, ரயில்வே துறை ஏற்றுக்கொண்ட இந்த நடைமுறை நியாயமானது மற்றும் வெளிப்படையானது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது, தொடர்பாக எந்தஉத்தரவுகளையும் பிறப்பிக்கத் தேவையில்லை. எனவே, இந்த பொதுநல வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி சதீஷ் சந்திரா தனது உத்தரவில் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago