வெளிநாட்டு யுடியூபர் மீது பெங்களூருவில் தாக்குதல்

By இரா.வினோத்


பெங்களூரு: நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டச்சு யுடியூபர் பெட்ரொ மொடா. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணம் தொடர்பான வீடியோக்களை தனது 'மேட்லி ரோவர்' சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் பெட்ரோ மொடா நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள 'சன்டே மார்க்கெட்' (ஞாயிற்றுக்கிழமை மட்டும் போடப்படும் சந்தை) பகுதிக்கு சென்றார்.

அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள், துணிமணிகள் ஆகியவற்றை தனது கேமராவில் பதிவு செய்தார். அப்போது நவாப் ஷெரீஃப் என்ற கடைக்காரர் அவரை பிடித்து கையை முறுக்கி தாக்கினார்.

மேலும் பெட்ரோ மொடாவின் கேமராவையும் பிடுங்கமுயற்சித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சமூகவலைதள பயனாளர்கள் பெட்ரோ மொடாவிடம் மன்னிப்பு கோரியதுடன், நவாப் ஷெரீஃப் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பெங்களூரு மேற்கு மண்டல துணை ஆணையர்லட்சுமன் நிம்பர்கி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு சிட்டி மார்க்கெட் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீஸார் பெட்ரோ மொடாவை தாக்கிய நவாப் ஷெரீஃப் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்