திருமலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 1,400 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை தரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத் துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இதையொட்டி திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அவ்வப்போது குழந்தைகள் கடத்தல், திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.
திருலையில் கோயில் வளாகம், மாடவீதிகள், பஸ் நிலையம், அன்னதான மையம், லட்டு பிரசாத மையம், தலைமுடி காணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கெனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று திருமலையில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது முதல்கட்டமாக 250 கேமராக்கள் பொருத்தவும் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் 1,400 கேமராக்கள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago