தெலங்கானா சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார் கைது

By என்.மகேஷ் குமார்

விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தெலங்கானா சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.

தெலங்கானா மாநில குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக, விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி சட்டப் பேரவை முற்றுகை போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, சட்டப்பேரவையைச் சுற்றிலும் 400 மீட்டர் தொலைவுக்கு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்புக்காக சட்டப்பேரவை முன்பு சுமார் 3,000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி சட்டப்பேரவையை முற்றுகையிடுவதற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று பல்வேறு வாகனங்களில் ஹைதராபாத் வந்தனர். பின்னர் மாநில தலைவர் உத்தம் குமார் ரெட்டி தலைமையில் காந்தி பவனிலிருந்து சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் தெலங்கானா அரசை விமர்சித்து கோஷமிட்டனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான காங்கிரஸாரை போலீஸார் கைது செய்தனர்.

இதே கருத்தை வலியுறுத்தி நேற்று தெலங்கானா மாநில பாஜகவினரும், அதன் தோழமை கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினரும் தெலங்கானா சட்டப்பேரவை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்