திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் மீண்டும் என்கவுன்ட்டர் நடக்கலாம் என்று அதிரடிப்படை ஐஜி காந்தாராவ் தெரிவித்துள் ளார்.
திருப்பதி அடுத்துள்ள பாகராப்பேட்டை சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று அதிகாலை அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மீது செம்மர கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உயிர் காத்துக்கொள்ள ஒரு ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தை அதிரடிப்படை ஐஜி காந்தாராவ் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகராப்பேட்டை அருகே செம்மரங்களை வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி திங்க்ள்கிழமை அதிகாலை 3 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட செம்மர கடத்தல் கும்பலை அதிரடிப்படையினர் பார்த்தனர். அவர்களை சரண் அடையும் படி கூறினர். ஆனால், அவர்கள் சரணடைய மறுத்தது மட்டுமின்றி, கத்தி, கோடாலியால் அதிரடிப்படையினரை தாக்க தொடங்கினர். இதில் ஒரு வீரர் காயமடைந்தார். அதன்பின்னர், தற்காப்புக்காக அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் கடத்தல் கும்பல் மரங்களை போட்டு விட்டு தப்பி ஓடியது. இவர்களை துரத்தி சென்று பிடித்ததில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளோம். அங்கிருந்த 13 செம்மரங்களைப் பறிமுதல் செய்தோம். இதே நிலை தொடர்ந்தால் வேறு வழியின்றி திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் மீண்டும் என்கவுன்ட்டர் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு ஐஜி காந்தாராவ் கூறினார்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த என்கவுன்ட்டரில் திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். தனித்தனியாக 4 பேர் என மொத்தம் 24 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப் பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செம்மரம் கடத்த, கடத்தல் கும்பல் அதிக பணம் கொடுப்பதாகவும், போலீஸ் நடவடிக்கையில் ஒருவேளை உயிரிழந்தால் குடும்பத்துக்கு பெருந்தொகை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஏழைகள் சிலர் செம்மரம் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago