எஸ்சி, எஸ்டி, மீனவர்கள் 23 பேருக்கு அர்ச்சகர் சான்றிதழ்

By என்.மகேஷ் குமார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம பிரச்சார திட்டத்தின் கீழ் 15 நாள் அர்ச்சகர் பயிற்சி முடித்த எஸ்.சி., எஸ்.டி., மீனவ மாணவர்கள் 23 பேருக்கு நேற்று முன்தினம் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தர்ம பிரச்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்கீழ், நம் கோயில் திட்டம், இலவச இந்து திருமண திட்டம், சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சிகள், தலித் காலனிகளில் கோயில் கட்டும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், தலித், பழங்குடியினர் மற்றும் மீனவ மாணவர்களுக்கு 15 நாள் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 23 மாணவர்கள் கொண்ட 3-வது குழு பயிற்சி நிறைவு செய்துள்ளது.

இவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று முன்தினம் சான்றிதழ் வழங்கினார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தலித்துகள், மீனவர்கள் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 500 கிராமங்களில் ஏழுமலையான் கோயில் கட்டும் பணி நடைபெறுவதாகவும், அந்த கோயில்களில் இவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும் அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்