ஆக்ரா அருகே ஃபதேபூர் சிக்ரி பகுதிக்கு சுற்றுலா வந்த சுவிஸ் தம்பதி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 5 இளைஞர்களை உத்தரபிரதேச அரசு கைது செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குவான்டின் ஜெரிமி கிளர்க் - மேரி டிராக்ஸ் தம்பதி, உத்தரபிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இவர்கள் கடந்த 22-ம் தேதி பதேபூர் சிக்ரி நகரில் சாலையோரம் படுகாயங்களுடன் கிடந்தனர். இவர்களைப் பொதுமக்கள் பார்த்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து சுவிஸ் தம்பதியை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் அவர்கள் டெல்லி அப்போலோ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அதை ஏற்று போலீஸாரும் அவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால், தாக்குதல் சம்பவம் குறித்து அவர்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
ஆனால், போலீஸாரே தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து உத்தரபிரதேச கூடுதல் டிஜிபி சந்திர பிரகாஷ் கூறும்போது, ''சம்பவம் நடந்தபிறகு அங்கிருந்த உள்ளூர்க்காரர் ஒருவர் 100-க்கு அழைத்து விவரங்களைக் கூறியுள்ளார். தங்களுக்கு எப்ஐஆர் கொடுக்க விருப்பமில்லை என்று சுவிஸ் தம்பதி கூறிவிட்டனர். இதனால் போலீஸாரே தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்'' என்றார்.
இந்நிலையில், சுற்றுலா வந்தபோது சுவிஸ் தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரபிரதேச மாநில அரசை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கோரியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குக் கடிதம் எழுதியுள்ள மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், ''இந்தத் தாக்குதல் நாட்டுடைய மாண்பின் மீது எதிர்மறை விளைவை ஏற்படுத்தக் கூடும்'' என்று தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago