‘லவ் ஜிஹாத்’ வழக்கு; என்ஐஏ விசாரணைத் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திட்டவட்டம்

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

இந்துப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டதான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு அவசியமில்லை என்று பினரயி விஜயன் தலைமையிலான கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஷபின் ஜெகன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு இந்து பெண்ணை மணந்தார். அதற்கு முன்னதாக அந்தப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ‘லவ் ஜிஹாத்’ (காதல் வயப்படுத்தி மதமாற்றம் செய்தல்) எனக் கூறி இந்த திருமணத்தை ரத்து செய்தது. மேலும் இதுகுறித்து விசாரிக்குமாறு மாநில போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஷபின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இது தொடர்பாக தேசிய விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ, இந்துப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்து அவர்களைத் தீவிரவாதத்துக்கு இட்டுச் செல்வது ஒரு வழக்கமான பாணியாக கேரளாவில் இருந்து வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இது குறித்த கேரள போலீஸ் விசாரணையில் எந்த விதத் தவறுகளும், குற்றங்களும் நடந்ததாக வெளிவரவில்லை, ஆகவே தேசிய விசாரணை அமைப்பின் விசாரணை அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையில் கேரள போலீஸ் திறமையான முறையில் செயல்பட்டது என்றாலும் என்ஐஏ-வின் வாதங்களை ஏற்று உச்ச நீதிமன்றம் விசாரணையை மத்திய விசாரணைக் குழுவுக்கு மாற்றியது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரள அரசு இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “இதுவரையிலான கேரள போலீஸின் விசாரணையில் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் எதுவும் நடந்ததாக தெரியவரவில்லை. எனவே தேசிய விசாரணை அமைப்பின் விசாரணை தேவையற்றது” என்று தெரிவித்துள்ளது.

மாநில தலைமை போலீஸ் ஏற்கெனவே ஏடிஜிபி (கிரைம்ஸ்) மட்ட விசாரணைக்காக வழக்கை ஒப்படைத்துள்ளது, இதற்காக சிறப்பு விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய கேரள அரசு விசாரணையை என்ஐஏ-வுக்கு மாற்றியதை உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தியது.

சம்பந்தப்பட்ட பெண் இஸ்லாம் மதத்துக்கு மாறியது, இதில் சம்பந்தப்பட்டுள்ள மதநிறுவனங்கள், நபர்கள், அந்தப் பெண் தொடர்பிலிருந்த நபர்கள், குடும்பப் பின்னணி, திருமணம் செய்து கொண்ட ஷபின் ஜெகன் என்பவரின் குற்ற முன் நடவடிக்கைகள், இவர்கள் திருமணத்திற்கான நிதி ஏற்பாடுகள், ஹாதியாவை நாட்டை விட்டு வெளியே கடத்தும் முயற்சிகள் பற்றிய குற்றச்சாட்டுகள் என்று அனைத்து கோணங்களிலிருந்தும் கேரள போலீஸ் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளது, கேரள போலீஸுக்கு இந்த வழக்கைக் கையாளும் திறமை உள்ளது, என்ஐஏ சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் எதுவும் நடந்திருந்தால் மத்திய விசாரணை அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும், என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 16-ம் தேதி இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், கேரள அரசை நோக்கி, “கேரள போலீஸ் இதில் பாரபட்சமாக எடுக்கலாம் என்று கருதப்படுவதால் என்ஐஏ-விடம் விவரங்களைக் கேட்டோம்” என்றார்.

அதன் பிறகு அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் இப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆகஸ்ட் 16-ம் தேதி உத்தரவை கேள்விக்குட்படுத்தினார். மேலும் ஜஹனுக்கும் ஹாதியாவுக்கும் இடையே நடந்த மத இணைப்பு திருமணத்தைத் தடை செய்ய கேரள உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார் தீபக் மிஸ்ரா.

மேலும் அந்தப் பெண்ணை அவரது தந்தை கடந்த பலமாதங்களாக தன் பிடியில் வைத்திருப்பதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது.

“சட்டப்பிரிவு 226-ன் படி இந்தத் திருமணத்தை செல்லாது என்று உயர் நீதிமன்றம் அறிவிக்க முடியுமா, மற்றும் என்ஐஏ விசாரணை அவசியமா ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்து தர்க்கபூர்வ சட்டப்பூர்வ வாதங்களை நாங்கள் கேட்போம்” என்று கூறி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 9-ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்