திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, புரட்டாசி முதல் சனிக்கிழமையான கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
இந்நிலையில், 8-ம் நாளான நேற்று காலையில் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் மீது உப்பு, மிளகு போன்றவற்றை தூவி நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு குதிரை வாகனத்தில் உற்சவர் பவனி வந்து அருள் பாலித்தார். இன்று காலையில் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மாலையில் பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago