மத்தியப் பிரதேசம் | ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

செஹோர்: மத்தியப் பிரதேசம் செஹோர் மாவட்டத்தின் முங்கவலி கிராமத்தில் வயலில் தோண்டப்பட்ட 300 அடி ஆழ ஆள்துளை கிணற்றில், சிரிஸ்தி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை கடந்த செவ்வாய்கிழமை மாலை 1 மணி அளவில் தவறி விழுந்தது. முதலில் அந்த குழந்தை 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது.

அக்குழந்தையை மீட்பதற்காக பல வகை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அதிர்வு காரணமாக குழந்தை ஆழுதுளை கிணற்றில் 100 அடி தூரம் சென்றது. இதனால் அந்த குழந்தையை உடனடியாக மீட்கும் பணி சிக்கலானது.

குஜராத்திலிருந்து 3 பேர் கொண்ட ரோபோ குழு, சம்பவ இடத்துக்கு நேற்று காலை வந்து மீட்பு பணியில் இணைந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் ரோபோ ஒன்று இறக்கப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டது. குழந்தை சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனும் குழாய் மூலம் அனுப்பப்பட்டது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினருடன், குழந்தையை மீட்கும் பணியில் ராணுவ குழுவும் இணைந்தது.

ஆழ்துளை கிணறு அமைந்துள்ள இடத்தில் 12 பொக்கலைன் இயந்திரங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 52 மணி நேர போராட்டத்துக்குப்பின், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டதால், அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, வழியில் இறந்தது.

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்களை தடுக்க உச்சநீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு வழிகாட்டுதல்களை வழங்கியது. அது முறையாகப் பின்பற்றப்படாததால் இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்