ராகுல், ஸ்டாலின் பங்கேற்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

பாட்னா: அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக.,வுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இறங்கியுள்ளார். அதன் அடுத்த கட்டமாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பிஹார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 12-ம் தேதி நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஆனால், இதற்கான தேதியை தள்ளிவைக்கும்படி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.

இந்நிலையில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி நேற்று கூறியதாவது:

முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம், பாட்னாவில் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.

இதுபோன்ற கூட்டங்களுக்கு பிரதிநிதிகளை அனுப்பாமல் கட்சி தலைவர்களே பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ் குமார் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்