அகமதாபாத்: பிரதமரின் பட்டப்படிப்பு குறித்து கிண்டலான மற்றும் தரக்குறைவான விமர்சனம் குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அவரது கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் இருவரும் ஜூலை 13-ம் தேதி நேரில் ஆஜராக அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கல்லூரி பட்டப்படிப்பு விவரங்களை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கோரியது தொடர்பான வழக்கில் அவ்வாறு வழங்கத் தேவையில்லை என்று குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் இறுதியில் உத்தரவிட்டது.
மேலும் மனு தாக்கல் செய்த அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது.
இது தொடர்பாக கேஜ்ரிவாலும் அவரது கட்சி எம்.பி. சஞ்சய் சிங்கும் விமர்சனம் செய்தனர். இது குஜராத் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி அதன் பதிவாளர் பியூஷ் படேல் சார்பில் அகமதாபாத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி கேஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோர் ஜூன் 7-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயேஷ் சோவதியா முன்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜ்ரிவால், சஞ்சய் சிங் தரப்பில் அவர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராயினர்.
அர்விந்த் கேஜ்ரிவால், சஞ்சய் சிங் இருவரும் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் வழக்கு ஆவணங்கள் கேட்டும் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
ஜூலை 13-ல் ஆஜராக வேண்டும்: இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்ட அதேவேளையில், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரானவழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற ஒரு சுற்றறிக்கையை சுட்டிக்காட்டினார். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு கேஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகிய இருவரும் தங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்ய ஜூலை 13-ம் தேதி ஆஜராவார்கள் என அவர்களின் வழக்கறிஞர்கள் கூறினர்.
இதையடுத்து கேஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகிய இருவரும் ஜூலை 13-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago