புதுடெல்லி: குழந்தைகள், முதியவர்கள் உட்பட 216 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகாடன் நகரில் தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் மொழித் தடை, பழக்கமில்லாத உணவுகள் போன்ற சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
AI-173 என்ற ஏர் இந்தியா விமானம் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்களுடன் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்குப் புறப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை இன்ஜின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிடம் விமானத்தில் சிக்கியிருக்கும் பயணி ஒருவர் பேசி, அங்கு பயணிகளின் சிக்கல்களை விவரித்திருக்கிறார். ககன் என்ற அந்தப் பயணி தொலைபேசி வழியாக கூறியது: "இங்கு 230-க்கும் அதிகமான பேர் இருக்கிறோம். குழந்தைகளும் முதியவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். எங்களுடைய பைகள் இன்னும் விமானத்தில்தான் இருக்கின்றன. நாங்கள் பேருந்து மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறோம்.
சிலர் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு அனுப்பப்பட்டு அங்கு தரையில் விரிப்புகள் விரிக்கப்பட்டு படுக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை. இங்கு உணவு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கடல் உணவும், அசைவ உணவுமே அதிகமாக கிடைக்கின்றன. சிலர் பிரெட்டும் சூப்புமே சாப்பிடுகின்றனர். முதியவர்களின் மருந்துகள் தீர்ந்துவிடும் நிலையில் உள்ளது.
» உக்ரைன் அணை தகர்ப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு: ஐ.நா. கண்டனம்
» ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: கூர்ந்து கவனிக்கும் அமெரிக்கா
இத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் ரஷ்ய அதிகாரிகள் கனிவாக நடந்து கொள்கிறார்கள். ஆனாலும் மொழித் தடை இருக்கிறது. நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்று நாங்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவோம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
எங்கிருக்கிறது மகாடன்? - ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியுள்ள மகாடன் நகரம், வடக்கு ரஷ்யாவின் ஒகோட்ஸ்க் கடற்கரையில் அமைந்துள்ளது. மகாடன் ஒப்லஸ்ட் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து இங்கு விமானம் மூலம் செல்வதற்கு 7 மணிநேரம், 37 நிமிடங்களாகும். கடந்த 1993-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் கோலிமா தங்கவயல்களின் அமைவிடமாகவும் உள்ளது. இந்த நகரத்தில் சில ஆசிரியர் பயிற்சி, ஆராயச்சி நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இந்த மகாடன் நகருக்கு விமானம் மூலமாக செல்ல சராசரியாக 23 மணி நேரம் 45 நிடமிடங்கள் வரை ஆகிறது.
மாற்று விமானம் அனுப்பப்படும்: இந்தநிலையில், மகாடனில் சிக்கியிருக்கும் பயணிகளை சான் பிரான்சிஸ்கோ அழைத்துச் செல்ல மும்பையில் இருந்து மாற்று விமானம் அனுப்பி வைக்கப்படும் என்று புதன்கிழமை ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும், அவர்கள் உள்ளூர் ஹேட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
உன்னிப்பாக கவனிக்கிறோம்: விமானத்தில் அமெரிக்கர்கள் நிறைய பேர் இருக்கலாம் எனக் கருதப்படுவதால் இது தொடர்பாக உற்று நோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், "அமெரிக்காவுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதை அறிந்தோம். அது குறித்து கூர்ந்து நோக்கி வருகிறோம். அந்த விமானத்தில் அமெரிக்கர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அமெரிக்காவுக்கான விமானம் என்றால் நிச்சயமாக அமெரிக்கர்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஏர் இந்தியாவில் இருந்து வெளியான அறிக்கை ஒன்று மாற்று விமானம் அனுப்பப்படுவதாக தெரிவிக்கின்றது. அடுத்தடுத்த நகர்வுகளைக் கவனித்து வருகிறோம்" என்றார்.
இந்தநிலையில், மகாடன் விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டதில் இருந்து இதன் தொழில்நுட்ப கோளாறு ஆராயப்பட்டு வருகிறது. மேலும், மாற்று விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago