புதுடெல்லி: முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு பரிசோதனையை இந்திய கடற்படை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: எம்எச்-60 ‘ரோமியோ’ மல்டி- மிஷன் ஹெலிகாப்டர் ஐஎன்எஸ் விக்த் போர்க்கப்பலில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுக்குப் பிறகு மற்றொரு தனித்துவமான சாதனையை இந்திய கடற்படை நிகழ்த்தி காட்டியுள்ளது.
முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும் நீருக்கடியில் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் நீர்மூழ்கி குண்டு சோதனை செவ்வாயன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அந்த குண்டு துல்லியமாக தாக்கி அழித்தது. இது, இந்திய கடற்படை மற்றும் டிஆர்டிஓ-வின் (பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம்) குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை நிகழ்வாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago